Home Bibles ☰ Books நெகேமியா 3:29 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 3:29 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகக் கிழக்குவாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.

Cross references

எஸ்றா 2:37

இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

எஸ்றா 10:2

அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.

நெகேமியா 7:40

இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

நெகேமியா 10:8

மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,

எரேமியா 19:2

கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.

Interlinear

Choose Theme