Home Bibles உன்னதப்பாட்டு 6:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
உன்னதப்பாட்டு 6:3 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.

Cross references

சங்கீதம் 119:94

நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.

உன்னதப்பாட்டு 2:16

என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.

உன்னதப்பாட்டு 7:10

நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.

எபிரெயர் 8:10

அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:2

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

Interlinear

Choose Theme