Home Bibles நீதிமொழிகள் 22:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீதிமொழிகள் 22:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.

Cross references

உபாகமம் 19:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக.

உபாகமம் 27:17

பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

யோபு 24:2

சிலர் எல்லைக்குறிப்புகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக்கொண்டுபோய் பட்சிக்கிறார்கள்.

நீதிமொழிகள் 23:10

பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

நீதிமொழிகள் 24:15

துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

Interlinear

Choose Theme