Home Bibles யாத்திராகமம் 4:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யாத்திராகமம் 4:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று.

Cross references

எண்ணாகமம் 12:13

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.

உபாகமம் 32:39

நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

2 இராஜாக்கள் 5:14

அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.

மத்தேயு 8:3

இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

Interlinear

Choose Theme