Home Bibles ☰ Books 1 நாளாகமம் 26:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 26:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும், பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

Cross references

1 நாளாகமம் 24:5

எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.

1 நாளாகமம் 24:31

இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.

1 நாளாகமம் 25:8

அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும், மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

Interlinear

Choose Theme